முயற்சிகள் தவறினாலும் முயற்சிக்க தவறாதே!

*தமிழக அரசின் இ- சேவை*

Ayushman Bharat District Wise Workshop_Date - Tamil nadu

வருகிறது உலகின் மிகப்பெரிய இலவச மருத்துவ காப்பீடு
ஆயூஸ்மான் பாரத்

வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் உலகின் மிகப் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டமாக கருதப்படும்
”ஆயுஷ்மான் பாரத் யோஜனா"
என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நமது பாரத பிரதமர் அவர்கள் நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்க இருக்கிறார்.

இந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் மொத்தம் 50 கோடி ஏழை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்.....

No-1. முதற்கட்டமாக கிராமப்புற மக்கள் மற்றும் நகர்ப்புற கூலி தொழிலாளர்கள் உட்பட 10.74 கோடி மக்களுக்கு இதனைக் கொடுப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

No-2. வங்கி கணக்கு வைத்திருக்கும் 70 வயதுக்குட்பட்டு இருப்பவர்கள் யாராக இருந்தாலும் இந்த திட்டத்தில் இணைந்து  கொள்ளலாம்

No-3. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரை, மருத்துவ காப்பீடு பெற முடியும்.

No-4.பணம் செலுத்தாமலேயே, நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.

No-5.இத்திட்டத்தின் கீழ், 100 நோய்களுக்கு மேல் சிகிச்சையளிக்கப்படும்.

No-6.தடுக்கக் கூடிய 70 நோய்களுக்கும், மற்றும் புற்றுநோய், இதய நோய் போன்ற, ஆபத்து மிக்க, 30 நோய்களுக்கு கட்டாயம் சிகிச்சையளிக்கப்படும்.

No-7. ஆயுஷ்மான் பாரத்திட்டத்தில் பயனாளியாக இணைய ஆதார் அவசியமில்லை என மத்திய சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது.
இந்திய அரசால் அங்கிகரிக்கப்பட்ட எந்த அடையாள அட்டையாக இருந்தாலும் இத்திட்டத்தில் பயனாளியாக இணைய முடியும்.

உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்தி பயன்பெறுங்கள்....